ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான கன்னட நடிகர் சுதீப் தற்போது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் .
தற்போது சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அட்வெஞ்சர் நிறைந்த திரில் படமாக உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 28-ம் தேதி 3டி டெக்னலாஜியில் இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்