'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இன்றைய முன்னணி தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'மாஸ்டர்' படம் தெலுங்கிலும் ஓரளவிற்கு வசூலைக் குவித்தது.
நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கு ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள பிரபலமான சுதர்ஷன் 35எம்எம் தியேட்டரில் 'துப்பாக்கி' படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கு நிறைந்த காட்சியாக அக்காட்சி நடைபெற்றுள்ளது. தியேட்டரில் விஜய்யின் பிறந்தநாளை தெலுங்கு ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.
விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வரும் 'வாரிசு' படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. இப்படம் மூலம் தெலுங்கில் விஜய்யின் மார்க்கெட் இன்னும் உயரலாம் என டோலிவுட்டினர் கருதுகிறார்கள்.