‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அடங்கமறு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் மாறிமாறி நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்து வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கதாநாயகனை சுற்றிவந்து காதலிப்பது, அவருக்கு கஷ்டம் வரும் நேரத்தில் உதவுவது, இல்லை நாயகனுடன் கோபித்துக்கொண்டு சண்டை போடுவது என்பது போன்ற வழக்கமான ரெடிமேட் கதாநாயகி கதாபாத்திரமாகவே இருந்து வந்தன.
இந்தநிலையில் அவர் தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக நடித்துள்ள பக்கா கமர்சியல் என்கிற படத்தில் இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆம்.. இயக்குனர் மாருதி இயக்கியுள்ள இந்த படத்தில் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷி கண்ணா. இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஷி கண்ணா, இதுவரை நடித்திராத விதமாக இந்த படத்தில் முழுநீள நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளதுடன் வசன உச்சரிப்புகளையும் வித்தியாசமான பேசி நடித்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோயின் என்று சொல்வதைவிட காமெடியன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டார் ராஷி கண்ணா.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள ராஷி கண்ணா நடித்த காட்சிகளை பார்க்கும்போது அவர் சொல்வது உண்மை தான் என்றே தோன்றுகிறது.




