பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாகிறது. கடந்த வாரம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாளின் போது படம் பற்றிய அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்போது எதுவும் வெளியாகவில்லை.
இன்று படம் பற்றிய அப்டேட் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கான டீசர் தற்போது உருவாகி வருகிறதாம். ஜுலை மாதம் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி டீசரை வெளியிட உள்ளார்களாம்.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' போன்ற படங்களின் வரிசையில் இந்த 'பொன்னியின் செல்வன்' படமும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.