ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

இசையமைப்பாளர் இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இன்று (ஜுன் 2) இளையராஜாவின் 80வது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவை மக்களை இன்னிசை மழையில் நனையவிடப்போகிறார். கோவை கொடீசியா வளாகத்தில் மாலை 6 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் சில பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அவரது பதிவில், ‛இந்த சிறப்பு நாளில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு அற்புதமான மற்றும் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது' எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ‛டபுள்' ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.