'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. ஹிந்தியில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் ரீமேக் தான் இந்த படம். ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஊர்வசி, நடிகை கேபிஏசி லலிதா, யோகிபாபு, 'குக் வித் கோமாளி' புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
இந்நிலையில் நேற்று நடந்த லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பிளே ஆப் போட்டியின் இடையில் இப்படத்தின் டிரைலரை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். திருமண வயதில் பையன்கள் உள்ள நிலையில் பாட்டியாகும் வயதில் நடிகை ஊர்வசி கர்ப்பமாக இருப்பது போன்ற கதைக்களத்தில் காமெடியாக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.