ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
டிக் டாக் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர். மைம் ஆக்டிங்கில் எப்போதும் எதையாவது கருத்தை வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவில் காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தரி சீரியலில் மெயின் லீடாக நடித்து கலக்கி வருகிறார். டிஆர்பியில் டாப் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் இந்த சீரியலில் கேப்ரில்லாவின் நடிப்புக்கென்றே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல்வேறு கஷ்டங்களை சமாளித்து இன்று ஒரு நடிகையாக விருதுகளையும் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
சீரியல், சினிமா என்பதை தாண்டி கேப்ரில்லா நாடக்குழு ஒன்றையும் நிறுவி உள்ளார். சொந்தமாக முழுநீள மெளன நாடகம் தயாரிப்பதை இலக்காக கொண்டு பயணித்து வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் உள்ள பலூன் சுடும் விளையாட்டில் அனைத்து பலூன்களையும் ஒவ்வொன்றாக மொத்தமாக சுட்டு முடிக்கும் கேப்ரில்லா, அதற்கு பொருத்தமாக 'உன்னோட குறிக்கோள் சரியா இருந்தா போதும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் உனக்கானது தான்' என மோட்டிவேஷ்னலாக வீடியோ ஒன்றை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.