கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் அபியும் நானும். இதில் லீட் கதாபாத்திரங்களில் வித்யா மோகன் மற்றும் அர்விந்த் ஆகாஷ் நடித்து வருகின்றனர். என்ன தான் தாய்-மகள்-மகன் என மெயின் ஸ்டோரியில் செண்டிமெண்ட் ட்ராக் ஓடினாலும், சீரியலை சுவாரசியமாக்குவது என்னவோ ரகு - வாத்தியின் லவ் ட்ராக் தான். ஆட்டோ ஓட்டும் வாத்தியை ரகு தன் உண்மையான அடையாளத்தை மறைத்து காதலிப்பதும் அதில் ஏற்படும் காமெடிகளும், குழப்பங்களும் தான் சீரியலை எங்கேஜாக கொண்டு செல்கிறது. இந்த வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரம்யா கவுடா. தமிழுக்கு புதிதாக வந்துள்ள ரம்யா கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த இளைஞர்களும் அவரது அழகை கண்டு மயங்கிவிட்டனர். ரம்யா கவுடாவிற்கு ஒரு ஆர்மியை ஆரம்பித்து 'பியூட்டி கம்மிங் ஒத்து' என புகழ்ந்தும் வருகின்றனர்.