'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தை இயக்கி வெற்றிப்படமாக மாற்றியதுடன் அதன் இரண்டாம் பாகத்தையும் அதே அளவு விறுவிறுப்புடன் இயக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை மோகன்லாலுக்கு கொடுத்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம்-2 வெளியாகி முடிந்ததும் மீண்டும் மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற புதிய படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப் அதையும் குறுகிய காலத்தில் முடித்தார். சமீபத்தில் நேரடியாக ஒடிடியில் வெளியான இந்தப்படம் வரவேற்பை பெற்றது.
மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.. ஆனால் திரிஷ்யம்-2 படத்தை இயக்குவதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் கொரோனா தாக்கம் காரணமாக அதன் படப்பிடிப்பை துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்திவிட்டார். அந்தப்படத்தின் மீதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட இருந்தது தான் காரணம்.
இந்தநிலையில் டுவல்த் மேன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராம் படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க இருப்பதாக கூறியுள்ளார் ஜீத்து ஜோசப். இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என்பதுடன், மோகன்லாலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.