'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது |

ஜீ தமிழ் சேனலில் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது. இது ஒரு வகையில் சின்னத்திரை நடிகைகளின் அழகிப்போட்டி என்று கருதும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் நடிகர் நகுல் செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் நடிகை பார்வதி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தேஜஸ்வனி சில புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆயிஷா மூன்றாம் இடம் பிடித்தார்.
பார்வதி தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை தனது பெற்றோருடன் பெற்றுக் கொண்டார். தனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை தனது தாயாருக்கு அணிவித்து மகிழ்ந்தார். ஏராளமான பரிசு பொருட்களும் அவருக்கு வழங்கப்பட்டது. பார்வதி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மருமகளாக நடித்து வருகிறார். அதோடு தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.




