ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
டி.ராஜேந்தரால் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன்பிறகு குஷி, லூட்டி, சொன்னால்தான் காதலா, சாக்லேட், வேதம் உள்பட பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது படவாய்ப்புகள் இன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அண்ணா நகரில் வசித்து வரும் அவரது வீட்டில் வேலை பார்த்த 2 வடமாநில சிறுமிகள் மும்தாஜ் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். "நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வருகிறோம். ஆனால் அவர் வீட்டில் வேலை செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. அவர் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மறுக்கிறார்" என்று தங்கள் புகாரில் கூறியுள்ளனர்.
சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், அப்பெண்னை மீட்டு, காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் என்பதும், இவரும் இவரது 17 வயது தங்கையும் கடந்த ஆறு ஆண்டுகளாக நடிகை மும்தாஜ் வீட்டில், வீட்டு வேலைக்கு சேர்க்கப்பட்டு பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மும்தாஜ் வீட்டில் இருந்த, 17 வயது சிறுமியை போலீசார் மீட்டு, ஷெனாய் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஏன் மும்தாஜ் வீட்டில் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், இந்த புகாரில் சிறுமி ஒருவர் இருப்பதால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை வேலைக்கு சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால், மும்தாஜ் மீது வழக்கு பதிவு செய்யயும் வாய்ப்புள்ளதாக, போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.