22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் அனைவருமே நடனத்திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களில் நடனத்திற்கு என்று ரசிகர்களால் பாராட்டப்படுபவர் ஜூனியர் என்டிஆர் தான். இங்கே தமிழில் எப்படி விஜய்யின் நடனம் பேசப்படுகிறதோ, அதேபோல தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் நடனத்திற்கு என்றே ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டுக்கூத்துக்கு ஜூனியர் என்டிஆர் ராம்சரண் இணைந்து ஆடியது ரசிகர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சேகர் மாஸ்டர் என்பவர் ஜூனியர் என்டிஆரின் நடன திறமை பற்றி ஒரு பேட்டியில் கூறும்போது, “நடனத்திற்காக ரிகர்சல் எதுவும் பண்ணாமல் நேரடியாக டேக்கில் ஆடும் ஒரே நடிகர் யார் என்றால் அது ஜூனியர் என்டிஆர் தான்.. நாம் சொல்லிக்கொடுக்கும் அசைவுகளை பார்த்துக்கொண்டே அப்படியே மனதில் உள்வாங்கி நேரடியாக டேக்கிலேயே ஆடி விடும் திறமை அவருக்கு உண்டு. அதுமட்டுமல்ல அப்படி ஆடும் நடனத்தையும் ஒரே டேக்கில் ஓகே செய்வது என்பது கடினமான காரியம்.. அதையும் ஜூனியர் என்டிஆர் அசால்ட்டாக செய்துவிடுவார்” என்று பாராட்டியுள்ளார்.