இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
மலையாளத்தில் நடிகை பார்வதி எப்படி நடிப்புக்கு தீனி போடும் கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது தமிழ் வெர்ஷனாகவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அதே பாணியை பின்பற்றித்தான் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது இந்த இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான செய்தி தான்..... ஆம்.. மலையாளத்தில் பெண்களின் உரிமையை மையப்படுத்தி உருவாகும் 'ஹெர்' (அவளுக்காக) என்கிற படத்தில் தான் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருடன் ரம்யா நம்பீசன், ஊர்வசி லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோரும் நடிக்கின்றனர். லிஜின் ஜோஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு அர்ச்சனா வாசுதேவ் என்பவர் கதை எழுதியுள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.