'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா நடிப்பில் உருவான படம் செல்பி. இதனை வெற்றி மாறனின் உறவினர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை எஸ்.தாணு வெளியிட்டார். இந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. விழா மேடையிலேயே தாணு தனது தயாரிப்பில் அடுத்த படம் இயக்க இயக்குனர் மதி மாறனுக்கு 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: 'செல்பி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததற்கு மதிமாறனை நிறைய பாராட்டலாம். ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது. வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். என்றார்.