நடிகர்களை போன்று நடிகைகளையும் மதியுங்கள் : அனுஷ்கா கோபம் | கல்வி அறக்கட்டளை தொடங்கும் சிரஞ்சீவி | டிராகன் படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு செலவு 1.5 கோடியாம் | சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா | துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு? | பாலிவுட்டில் அறிமுகமாகும் பாலாஜி மோகன் | சூர்யா 47 படத்தில் ஆக் ஷனில் நஸ்ரியா | ஜெமினி தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திற்கு இன்ஸ்பிரசேன் : சரண் | மக்களின் வாழ்வியல் பிரச்னைகளை பேசும் படங்கள் : யோகிபாபு ஆசை | பிளாஷ்பேக் : பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை இழந்த நிஷாந்தி |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஹிந்தி நடிகையான ஆலியா பட் அறிமுகமானார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை படம் வெளிவந்த உடன் எழுந்தது. மேலும், படம் பற்றிய சில புகைப்படங்கள், பதிவுகளை ஆலியா பட் நீக்கிவிட்டார் என்றும் பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா பட் பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார் ராஜமவுலி. “எனக்கு உண்மையில் ஆலியா பட்டை ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடிப்பிற்கும், திறமைக்கும் அவரை மிகவும் மதிக்கிறேன். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவரும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவரும் நானும் நடிகையாக, இயக்குனராகப் பணியாற்றினோம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருக்குப் பெரிய கதாபாத்திரம் இல்லை. அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பது தெரியும், ஆனால், இரண்டு சக்திகளை ஒன்றிணைக்கும் மிக மிக முக்கிய கதாபாத்திரம். அதைத்தான் நான் ஆலியாவிடம் சொன்னேன், அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவருடன் வரும் நாட்களில் உண்மையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருக்கிறேன்,” எனப் பதிலளித்துள்ளார்.