விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
காதலர் கவுதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதையடுத்து தனது கர்ப்ப கால அனுபவங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வரும் காஜல் அகர்வால், தற்போது தனது கணவருக்கு ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு பெண் விரும்பக்கூடிய சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பாவாக நீங்கள் இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு தூங்குவது வரை என்னை கவனித்துக் கொள்வதற்கு நன்றி. எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரின் அட்வைஸ்படி என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள். அவ்வப்போது அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். என்னை நேசிப்பதன் மூலம் நம்முடைய அன்பான குழந்தையும் நீங்கள் நேசத்துடன் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் ஒரு சிறந்த தந்தையாக இருப்பீர்கள் என்பதை நான் உணர்கிறேன்.
நீங்கள் ஒரு முன்மாதிரி அப்பாவாக இருக்கப் போகிறீர்கள். அதோடு இனிமேல் நமது வாழ்க்கை சவாலாக இருக்கப் போகிறது. காரணம் கூடிய சீக்கிரமே நமக்கு அழகான குழந்தை பிறக்கும். இதனால் வார இறுதி நாட்களில் திரைப்படங்களுக்கும் அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாது. தூக்கமில்லாத இரவுகள் இருந்தாலும் உடல் நிலை சரியில்லாமல் போனாலும் நம் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சி இருக்கப் போகிறது. என்றாலும் எப்போதும் மாறாமல் இருப்பது நான் உங்களை நேசிப்பது தான். நீங்கள் என் அருகில் இருப்பதைதான் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நீங்கள் ஒரு அற்புதமான தந்தையாக இருக்கப்போகிறீர்கள் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.