சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனரான தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. காவலர் பயிற்சி பள்ளியைக் மையமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் அழைத்து டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பை பற்றி பேசி பாராட்டினார். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று சொல்லத் தெரியவில்லை. நான் கனவில் கூட நினைக்காத சாதனை இது. '' என தெரிவித்துள்ளார் .