சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சைபர் கிரைமை மையமாக வைத்து இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ள ஹிந்தி படம் 'தில் ஹே கிரே'. வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் கதையை சுசி கணேசனுடன் தாரிக் முகமது மற்றும் நவின் பிரகாஷ் ஆகியோரும் இணைந்து எழுதியுள்ளனர்..
சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) பயணமாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது, ''இந்த படத்தின் கதையும் அதன் மொத்த பின்னணியும் இன்றைய காலகட்டத்திற்கான இன்றைய வயதினருக்கான முக்கியமான ஒன்று. ஆன்லைனில் இன்று பல நிகழ்வுகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்தப்படம் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லிவிட்டு போகாமல், தற்போது மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாகவும் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த கூடிய சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் ஒரு கருவியாகவும் இருக்கும். எம்.ரமேஷ் ரெட்டி மற்றும் அனைவருடனும் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
இந்தப்படம் ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்., 14ல் வெளியாகிறது.