'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் ஜனவரி மாதம் யு-டியூபில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே அடுத்தடுத்து பல புதிய இந்தியத் திரையுலக சாதனைகளை இந்த டீசர் படைத்தது.
இந்திய அளவில் அதிக பார்வைகளைப் பெற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தில் இந்த டீசர் இருந்து வருகிறது. வேறு எந்த ஒரு படத்தின் டீசல் அல்லது டிரைலர் இந்த சாதனையை இதுவரை முறியடிக்கவில்லை. இப்போது 'கேஜிஎப் 2' டீசர் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் 132 மில்லியன் பார்வைகளுடன் ஹிந்திப் படமான 'வார்' டிரைலர் உள்ளது.
'கேஜிஎப் 2' டீசரின் சாதனையை 'கேஜிஎப் 2' டிரைலர்தான் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசரை படம் வெளியாகும் ஐந்து மொழிகளுக்கும் பொதுவாக வெளியிட்டிருந்தார்கள். ஆனால், டிரைலரை 5 மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். ஐந்து மொழிப் பார்வைகளையும் சேர்த்து வேண்டுமானால் அதை சாதனையாகக் கொள்ளலாம்.
'கேஜிஎப் 2' டிரைலர் கன்னடத்தில் 25 மில்லியன் பார்வைகைள், ஹிந்தியில் 76 மில்லியன், தெலுங்கில் 31 மில்லியன், தமிழில் 21 மில்லியன், மலையாளத்தில் 10 மில்லியன் பார்வைகள் என கடந்த ஒரு வாரத்தில் 163 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பட வெளியாவதற்குள் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்து டீசர் சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.