தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் யு டியுபில் நேற்று மாலை வெளியானது.
டிரைலர் வெளியானதிலிருந்தே அது பற்றி பரபரப்பான 'காப்பி' குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைத்து வருகிறார்கள். யோகிபாபு நடித்து வெளிவந்த 'கூர்க்கா' படத்தின் கதையை அப்படியே மீண்டும் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. நேற்று மாலை கூட டுவிட்டரில் 'கூர்க்கா 2' என்று 'பீஸ்ட்' டிரைலரை ரசிகர்கள் கிண்டலடித்தனர்.
அது மட்டுமல்ல ப்ரூஸ் வில்லிஸ் நடித்து 1988ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'டை ஹார்ட்' படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். சீனத் திரைப்படமான 'ரிட்டர்ன் ஆப் ஸ்பெஷல் போர்சஸ் 5' என்ற படத்தின் சாயலும் இந்த 'பீஸ்ட்' படத்தில் உள்ளது என்கிறார்கள்.
மேலும், டிரைலரில் இடம் பெற்றிருந்த பின்னணி இசை அமெரிக்காவில் பத்து வருடங்களுக்கு முன்பு வந்த ஆல்பம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்றும் இரண்டின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்கள், வாட்சப் ஆகியவற்றில் பரவி வருகிறது. விஜய் நடித்து வெளியாகும் படங்களின் டிரைலர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறைதான் இத்தனை சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.