ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி | கண்ணப்பாவுக்காக உ.பி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தின் டிரைலர் நேற்று மாலை கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் யு டியுபில் வெளியானது.
நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'கேஜிஎப்' முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இரண்டாம் பாகத்தின் டீசர் கடந்த வருடம் ஜனவரியில் வெளியாகி 248 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
நேற்று வெளியான டிரைலர் ஐந்து மொழிக்குமாக சேர்த்து 24 மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லியன் பார்வைகளை தாண்டியது. ஹிந்தி டிரைலர் 48 மில்லியன், கன்னட டிரைலர் 18 மில்லியன், தெலுங்கு டிரைலர் 19 மில்லியன் தமிழ் டிரைலர் 11 மில்லியன், மலையாள டிரைலர் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 'ஆர்ஆர்ஆர்' பட டிரைலர் 24 மணி நேரத்தில் 51 மில்லியன் பார்வைகள் பெற்ற சாதனையை 'கேஜிஎப் 2' டிரைலர் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று முறியடித்துள்ளது.