நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்புவின் என்ட்ரிக்கு பிறகு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டில் ரீ என்ட்ரி கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சமீபத்தில், போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றுள்ளது. இதில் முதல் என்ட்ரியாக கலக்கப்போவது யாரு புகழ் தீனா என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் காமெடி மன்னனான தீனா பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கலக்கியுள்ளார். எனவே, நேற்று அவரது என்ட்ரி ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நபராக டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் சாண்டி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3-ல் விளையாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தார். இப்படி ரசிகர்களுக்கு பரிட்சயமான அதேசமயம் மிகவும் பிடித்தமான இரண்டு நபர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருப்பது ஏற்கனவே, இருக்கும் ஹவுஸ்மேட்டுகளுக்கு போட்டியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் எப்போதும் வம்பு, சண்டை என சீரியஸாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இனி கொஞ்சம் காமெடியையும் எதிர்பார்க்கலாம்.