சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் திரையுலகின் 80 களில் வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தை பலராலும் மறக்க முடியாது. இளையராஜாவின் இசையில் ஒலித்த 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடலை இன்றளவும் முனுமுனுப்போர் ஏராளம். அந்த பாடல் காட்சியில் தோன்றிய நடிகர் ராஜசேகர், தமிழில் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் ரசிகர்களை அவர் அதிக அளவில் சென்றடைந்தது எப்போது என்றால் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் தான். இப்படி ஒரு அப்பாவா என பலரும் அவரை ரசிக்க ஆரம்பித்தனர். திரையில் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்த ராஜசேகரின் நிஜவாழ்க்கை உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை.
ராஜசேகர் - தாரா தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. ஒருவழியாக போராடி வடபழனியில் வீட்டை வாங்கினார். அதற்கும் பாதிக்கு மேல் எஸ்பிஐ வங்கியில் கடன் உள்ளது. கடந்த 2019ல் ராஜசேகர் உடல்நலக்குறைவால் இறந்துவிடவே தாரா அம்மையார் யார் துணையுமின்றி தனியாக வசித்து வருகிறார். அந்த வீடு தரும் வாடகை பணத்தில் தான் இத்தனை நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வங்கியில் வாங்கிய கடனுக்காக வீடும் ஏலத்துக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. உறவினர்களோ, நண்பர்களோ யாரும் தாராவுக்கு உதவ வரவில்லை. இறுதியாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முயற்சித்தும் பலனில்லை. தற்போது இருக்கும் சூழலில் வீடு ஏலத்துக்கு வந்தவிட்டால், அடுத்த மாதத்திலிருந்து சாப்பாட்டுக்கு வழி இல்லை என வருந்துகிறார் தாரா. திரையுலக பிரபலங்களோ, கலைஞர்களோ, அரசோ இதை கவனிக்கும் பட்சத்தில் அவருக்கு உதவி கிடைக்கலாம் என்பதால் தற்போது பலரும் தாரா அம்மையாரின் நிலையை சமூக ஊடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.