விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி |
மழை, திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, உத்தம புத்திரன், தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தெலுங்கு, இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ கொசசேப் என்கிற ரஷியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு போகிறார். நரகாசுரன், சண்டக்காரி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கப்ஜா என்ற பான் இண்டியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என 7 மொழிகளில் உருவாகிறது.
கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஆர். சந்துரு இயக்குகிறார். கேஜிஎப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு பேண்டசி படமாகும்.