'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமாவில் நடிகர்கள் தான் 60 வயதைக் கடந்தாலும் இளமையாக இருக்கிறார்கள் என்று பலரும் பொய் சொல்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 60 வயதைக் கடந்த சில ஹீரோக்கள் இன்னமும் 30 வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், 40 வயதை நெருங்கிவிட்டால் ஹீரோயின்களை ஒதுக்கிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களைத்தான் தருவார்கள். இருப்பினும் சில ஹீரோயின்கள் 40ஐக் கடந்தாலும் 50ஐ நெருங்கினாலும் இன்றைய இளம் ஹீரோயின்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில்தான் இருக்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாசன் நடித்து 1996ல் வெளிவந்த 'இந்தியன்' படத்தின் கதாநாயகியான பாலிவுட் நடிகை ஊர்மிளா 48 வயதைக் கடந்தவர். அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே பெரிய கதாபாத்திரங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் ஊர்மிளா இப்படி புகைப்படங்களை வெளியிட்டிருப்பது, அவர் மீண்டும் களத்திற்கு வரத் தயார் என்பதை உணர்த்துவதாக உள்ளது.