Advertisement

சிறப்புச்செய்திகள்

தனக்கு பதிலாக 2 முன்னணி கதாநாயகிகளை சிபாரிசு செய்த சமந்தா | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் கைது | பஸ் விபத்தில் சிக்கிய காந்தாரா படக்குழு ; படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதா? | 25 நாட்களைக் கடந்து லாபத்தை அள்ளிக் கொடுத்த 'அமரன், லக்கி பாஸ்கர்' | 'புஷ்பா 2' பின்னணி இசை: உறுதி செய்த சாம் சிஎஸ் | பெரிய படம், சிறிய படம் பட்ஜெட் தீர்மானிக்கக் கூடாது - சித்தார்த் | 'மல்லி' தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஜெய் எஸ் கே! | 'புஷ்பா 2' வியாபார பாணியை பின்பற்றும் 'கேம் சேஞ்சர்' | 24 மணி நேர சாதனையில் நம்பர் 1 இடத்தில் 'கிஸ்ஸிக்' | அக்ஷிதாவிற்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் - ஏப்ரல் வெளியீடா அல்லது ஜுன் வெளியீடா?

03 மார், 2022 - 06:57 IST
எழுத்தின் அளவு:
When-Vikram-movie-will-release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவுற்றது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, மார்ச் 14ம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்று அறிவித்தது.

இந்த மார்ச் மாதம் வரும் வாரங்களில் 'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றின் வெளியீட்டுத் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் “மன்மத லீலை, கேஜிஎப் 2, பீஸ்ட்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு பெரிய படத்திற்கும் இடையில் இரண்டு வார இடைவெளியை வினியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள்.

'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 'பீஸ்ட்' படமும் அதே தினத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் 28ம் தேதி 'விக்ரம்' படம் வெளியாகும் என கோலிவுட்டில் ஒரு தகவல் பரவியது. அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு மார்ச் 14ல் வெளியாகும் என்று அறிவித்தார்களாம்.

இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்தால் அன்று படம் வெளியாகலாம். அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படம் மே 13 வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி இறுதித் தேர்வுகள் நேரம் என்பதால் 'விக்ரம்' படத்தை வெளியிடுவார்களா என்பதும் சந்தேம்தான். சரியான தேதி எது என்பதைத் தெரிந்து கொள்ள 'விக்ரம்' ரசிகர்கள் இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் அஜித்அடுத்த படத்திற்காக உடல் எடையை ... 'டான்' வெளியீடு மீண்டும் தள்ளிப் போகுமா ? 'டான்' வெளியீடு மீண்டும் தள்ளிப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in