ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் |
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் சோஷியல் மீடியா மூலமாக அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
இந்தநிலையில் மலையாள முன்னணி நடிகர் பஹத் பாசில் முதல்வர் ஸ்டாலினை நேரிலேயே சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடன் இயக்குனர் மாரி செல்வராஜும் நேரில் சென்று முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தநிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
மாரி செல்வராஜ் அடுத்தததாக உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது இருவரும் அந்த நட்பின் நடிப்படையில் முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியதன் மூலம் பஹத் பாசில் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
பஹத் பாசில் நடித்து ஹிட்டான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.