புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
திருமணத்திற்கு பிறகு சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து முடித்த காஜல் அகர்வால், தான் கர்ப்பம் ஆனதை அடுத்து இந்தியன்- 2 படத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் தங்கையும் இஷ்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான நிஷா அகர்வால், காஜலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார். அதில், ஆம், இது அதிகாரப்பூர்வமானது. நான் இன்னொரு குழந்தைக்கு தாயாக போகிறேன்(காஜலின் வயிற்றில் கையை வைத்து போட்டோ பதிவிட்டுள்ளார் நிஷா). அந்த அன்பான குழந்தையை சந்திக்க என்னால் காத்திருக்க முடியாது. காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சுலு நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல பலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். நீங்கள் இருவரும் புதிய பாத்திரங்களை ஏற்று இந்த அழகான பெற்றோருக்கான பயணத்தை தொடங்குங்கள் என வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ள நிஷா அகவர்வால் .