இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள சீனியர் நடிகை கேபிஏசி லலிதா. 74 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடன் படங்களில் நடித்த அனுபவம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழில் மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை நவ்யா நாயர் கேபிஏசி லலிதாவுடன் நடித்தபோது நடந்த நிகழ்வுகளை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
"2003-ல் அம்மக்கிளிக்கூடு என்கிற படத்தில்தான் முதன்முதலாக கேபிஏசி லலிதா சேச்சியுடன் இணைந்து நடித்தேன். முதல் நாள் படப்பிடிப்பின்போது என்னருகே வந்தவர் என்னை பற்றி விசாரித்துவிட்டு காலையில் நீ குளித்தாயா என்று கேட்டார். நானும் ஆமாம் என்று சொன்னேன். ஆனால் அவர் நான் குளிக்கவில்லை என்பதை கண்டுபிடித்து அதை ஆணித்தரமாக என்னிடம் கூறினார். உடனே நான் அழ ஆரம்பித்தேன். இருந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேலும் என்னிடம் குறும்பு செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் நான் எதிர்பாராத விதமாக, என் கன்னத்தில் முத்தமிட்டு என்னை கட்டி அணைத்து சமாதானப்படுத்தினார். எனக்கும் அவருக்கும் ஒரே பிறந்த நட்சத்திரம் என்பதால் எங்கள் விஷயங்களை இருவருமே மனம் விட்டு பகிர்ந்து கொள்வோம். சேச்சி என்று அழைத்தாலும் அவர் எனக்கு ஒரு அம்மாவை போல இருந்து பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்" என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.