ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விருது போட்டிக்கு தகுதி பெறும் படங்களின் பட்டியலை ஆஸ்கர் விழாக்குழு அறிவித்துள்ளது.
பெல்பாஸ்ட், கோடா, டோண்ட் லாக்அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்ட், லிகோரியா பீட்சா, நைட்மேர் அலே, தி பவர் ஆப் டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி ஆகிய படங்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தி பவர் ஆப் தி டாக் என்ற படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், துணை நடிகர், துணை நடிகை, சிறந்த இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு. சிறந்த தயாரிப்பு நிர்வாகம், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒலிப்பதிவு உள்பட 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதில் குறைந்த பட்சம் 6 விருதுகளை படம் வெல்லும் என்கிறார்கள்.
இதனுடன் ஏற்கெனவே 2 முறை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தனது வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சிறந்த இயக்குனருக்காக விருது கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.