'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
சிம்பு நடித்த 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிம்பு தலையீட்டால் தனக்கு 9 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு புகார் கொடுத்ததாக மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷாலை தனது வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.
தான் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இல்லை, சங்க நிர்வாகத்துக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று விஷால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தது.