நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவரது தந்தை விபின் மோகன் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த மஞ்சிமா, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள எப்ஐஆர் படம் நாளை வெளிவருகிறது.
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த காதல் செய்தியை இதுவரை மறுக்கவில்லை.