இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி | இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி | ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள் | மகாநடி படத்தில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்? - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் | லண்டனில் தயாராகும் வேலு நாச்சியார் படம் | பான் இந்தியா படமாக வெளியாகும் 'அகத்தியா' | என் வருமானத்தை தடுக்காதீர்கள் - ஷாருக்கான் ஆதங்கம் |
சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கிறார். இவர் 3 படத்தில் அறிமுகமானாலும் ஹீரோவாக நடித்த முதல் படம் மெரினா. இதை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். அந்தவகையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.
இதற்காக நன்றி தெரிவித்துள்ள அவர், ‛‛இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்... நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம். இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், ஏனைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனால, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி - தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள். நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே. என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்'' என்றார் சிவகார்த்திகேயன்.