'வாத்தி' இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ் | பிளாஷ்பேக்: நிறங்கள் மாறி வெளிவந்த “நிறம் மாறாத பூக்கள்” | அல்லு அர்ஜுனை நெருங்க முடியாத 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | வரலட்சுமியை நினைத்து முதன்முறையாக அழுதேன் ; வெளிப்படையாக பேசிய விஷால் | திரிசூலம், சச்சின், குண்டூர் காரம் - ஞாயிறு திரைப்படங்கள் | எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் |
கிராபிக் நாவலான அதர்வா - தி ஆரிஜின் என்ற நாவலில், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார். இந்த நாவல், தோனியின் முதல் பேண்டஸி பிக்சன் ஆகும். தோனியின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டுள்ளனர். கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150 க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நாவல் குறித்த தோனி கூறியதாவது: இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.
எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நாவலின் வெற்றியை தொடர்ந்து இதைப்படமாக எடுக்கும் முயற்சியும் உருவாகலாம் என தெரிகிறது.