நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பு ‛ஆர்ஆர்ஆர்'. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் ஆங்கில நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, கொமரபீம், அல்லூரி சீதா ராமராஜூ ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனை கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார்.
கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த இந்த படம் ஜன., 7ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சமீபத்தில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டால் மார்ச் 18 அல்லது ஏப்., 28ல் இந்த படத்தை வெளியிட தயார் என படக்குழு அறிவித்தனர்.
இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அடுத்த மாதத்திற்குள் தியேட்டர்கள் முழுமையாக 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என ஆர்ஆர்ஆர் படக்குழு நம்புகின்றனர். இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தை மார்ச் 25ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.