நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
நயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லரான மாயா படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இதுவரை தமிழில் வெளியான பேய்ப்படங்களில் வழக்கமாக இடம்பெறும் கதை சொல்லல் உத்திகளிலும், மேக்கிங்கிலும் இருந்து மாறுபட்டு, முதல் படத்திலேயே வித்தியாசம் காட்டி கவனிக்க வைத்தார். அதையடுத்து டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தற்போது கனெக்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இவர் இயக்கிய இறவாக்காலம் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது அஸ்வின் சரவணன் தன்னுடைய படங்களில் கதாசிரியராக, உதவி இயக்குனராக பணிபுரிந்த காவ்யா ராம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். தங்களது திருமண புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள அஸ்வின் சரவணன், “இது பேனா மற்றும் பேப்பரில் தொடங்கியது. காவ்யா ராம்குமார் என்கிற கவிதையில் முடிந்தது.. என்னுடன் கடினமான தருணங்களில் உடன் பயனித்ததற்கு நன்றி.. குறிப்பாக இந்த கொரோனா மூன்றாவது அலையின்போது உன்னுடன் நடக்கும் இந்த திருமணம் ஒரு சாகசம் செய்வது போலத்தான்” என கூறியுள்ளார்.