சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்துள்ள தனுஷ், அடுத்தபடியாக செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ், அதையடுத்து சேகர் கம்முலா, சுகுமார் ஆகிய தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் கால்சீட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது. 2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்றார் தனுஷ். அதையடுத்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்தவர், பின்னர் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்தார் . இந்த நிலையில் மூன்றாவது முறையாகவும் ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் தயாரித்து இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் தனுசுடன் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் குறித்த விபரங்கள் வெளியாக உள்ளது.