சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த மாறன் படத்தின் பொல்லாத உலகம் என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலை பாடி நடித்திருக்கும் தனுஷ், பாடல் தொடங்கி முடியும் வரை முழு எனர்ஜியுடன் அதிரடி நடனமாடி இருக்கிறார். குறிப்பாக இதற்கு முன்பு பாடல் காட்சிகளில் அவர் ஆடிய நாடனங்களை விட இந்த பாடலில் உடலை வளைத்து நெளித்து மிக அற்புதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி உள்ளார் தனுஷ். இதன்காரணமாக இந்தப் பொல்லாத உலகம் பாடல் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.