'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனாவின் இரண்டு அலைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து, இந்த மூன்றாவது அலை சற்றே வித்தியாசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்க அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்தமுறை இளம் நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொடரின் பிடியில் சிக்குவது அதிகரித்துள்ளது.
விஷ்ணு விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அந்தவகையில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவரது தந்தை மம்முட்டியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இப்போது துல்கருக்கும் கொரோனா பாதிப்பு என்கிற செய்தி இரண்டு தரப்பு ரசிகர்களையும் மொத்தமாக கவலைப்பட வைத்துள்ளார்..
இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “கோவிட் பாசிடிவ் என இப்போதுதான் ரிசல்ட் வந்துள்ளது.. என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.. சிறிய ஜுரம் தானே தவிர பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. கடந்த சில நாட்களாக என்னுடன் படப்பிடிப்பில் நெருங்கி பணியாற்றியவர்களில் உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இந்த சர்வதேச பரவல் இன்னும் ஓயவில்லை.. தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்” என கூறியுள்ளார்...