ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களது திருமண உறவை முறித்துக் கொள்ள போவதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்கள். அவர்கள் இருவரது சமூக வலைதளங்களிலும் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இது திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது இரண்டு மகன்களுக்கு பெற்றோராக இருக்கிறார்கள். அதனால் தங்களது கருத்து வேறுபாடுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு ஒன்று மீண்டும் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம் அந்த பதிவில், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று அந்தப் பிரச்னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டு இருந்தார் செல்வராகவன். தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோதுதான் செல்வராகவன் இப்படி பதிவிட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.