அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஓகே கண்மணி, கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
கொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் வீடியோவில் நேரலையில் பேசியும், அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்து அறிவுரைகளும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார். இந்த கடினமான உடற்பயிற்சிகள் மூலம் ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.
ரம்யா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியாக தெரிகிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாகி விட்டீர்கள் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு உடல் எடையை குறைத்து சிறிய பெண் போல தோற்றமளிக்கிறார். மேலும் அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.