Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதெப்படி இருக்கு : இளையராஜா வெளியிட்ட வீடியோ - கமல் வாழ்த்து

31 டிச, 2021 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Idhu-eppadi-irukku---Ilayaraja-video-goes-viral

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என்றார்.

இந்நிலையில் இளையராஜா இந்த விஷயத்தை குறிப்பிடாமல் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் காரில் பயணம் செய்யும் இளையராஜா, தனது இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்' படத்தில் இடம் பெற்ற ‛‛இளமை இதோ இதோ....'' என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியபடி வாழ்த்து சொல்லி உள்ளார். இளமை இதோ, இனிமை இதோ என்ற வார்த்தை வரும்போது தன்னை சுட்டிக்காட்டி உள்ள அவர் கடைசியில் ‛இதெப்படி இருக்கு' என தெரிவித்துள்ளார்.

தன்னைப்பற்றி பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கவே இப்படியொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்கின்றனர் திரையுலகினர்.

கமல் வாழ்த்து
இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்பு தான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக் கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்தை இயக்க மறுத்தேனா? அல்போன்ஸ் புத்திரன் விளக்கம்ரஜினி படத்தை இயக்க மறுத்தேனா? ... நயன்தாராவுடன் பிப்ரவரி 22ல் திருமணம்? சஸ்பென்ஸ் வைத்த விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் பிப்ரவரி 22ல் திருமணம்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

31 டிச, 2021 - 16:42 Report Abuse
தேனி ஆனந்த் வருகின்ற புத்தாண்டை வரவேற்க இதைவிட இனிப்பான செய்தி எதுவுமில்லை வேறலெவல் சந்தோஷம் இசைஞானிக்கு வணக்கங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in