'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படம் உலக அளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் முடிந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் அந்த சாதனையை இந்தப் படம் பெற்றுவிட்டதாம். சோனி மற்றும் டிஸ்னி இருவரும் இணைந்து தயாரித்த இந்தப் படம் 2021ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற ஹாலிவுட் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
2019ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்டார் வார்ஸ், தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர்' படம் தான் கடைசியாக ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்த படமாக இருந்தது.
அமெரிக்காவில் 587 மில்லியன் யுஎஸ் டாலர், யுனைட்டட் கிங்டம் 68 மில்லியன், மெக்சிகோ 52 மில்லியன், தென் கொரியா 41 மில்லியன், பிரான்ஸ் 35 மில்லியன், பிரேசில் 31 மில்லியன், ஆஸ்திரேலியா 31 மில்லியன், இந்தியா 29 மில்லியன், ரஷ்யா 28 மில்லியன், இத்தாலி 21 மில்லியன், ஜெர்மன் 20 மில்லியன் என 1000 மில்லியன், அதாவது 1 பில்லியன் வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூபாய் மதிப்பில் 220 கோடி வசூலை இதுவரை கடந்துள்ளதாம். அமெரிக்க வசூல் ரூபாய் மதிப்பில் 4406 கோடி. ஒட்டு மொத்தமாக 1 பில்லியன் யுஎஸ் டாலர் என்பது ரூபாய் மதிப்பில் 7492 கோடி ரூபாய்.
'ஸ்பைடர் மேன், நோ வே ஹோம்' படம் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம். மொத்த வசூல் மட்டும் சுமார் 7500 கோடி. பட்ஜெட்டை விட கூடுதலாக 6000 கோடி வசூலித்துக் கொடுத்துள்ளது. இந்த வசூல் படம் ஓடி முடிவதற்குள் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்.