சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 'மாயோன்'. அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக தன்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து 'மாயோனே மணிவண்ணா..' என்ற பாடலை வெளியிட்டனர். கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனி - காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இளையராஜாவின் இசையில் பாடி உள்ளனர். இந்த பாடல் வெளியான வெளியான 48 மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.