மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். கதாநாயகிகளாக பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜனவரி மாதம் ரிலீஸாகவுள்ள உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறி மாறி பறந்து சென்று கலந்து கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.
சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆலியா பட் படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் படப்பிடிப்பின்போது தன்னிடம் சரியாகவே பேசவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். மேலும் ராம்சரணும் ஜூனியர் என்டிஆரும் ஒன்றாக சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அங்கே பக்கத்தில் நான் இருக்கிறேன் என்பது கூட அவர்களுக்கு மறந்து போய்விடும்.. ஆனால் இப்படி இரண்டு ஹீரோக்களின் கெமிஸ்ட்ரி மற்றும் ஒற்றுமையை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்த ராம்சரண், “நீங்கள் ரொம்ப அழகாக இருந்ததால் உங்களிடம் பேச வெட்கப்பட்டு தயங்கி நின்றோம்” என நகைச்சுவையாக பதில் கூறினார்.