தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தவர் பிரிஜிதா சகா. ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிசிலும் நடித்திருந்தார். இதுதவிர அயோக்யா, வேலன் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
ஷ்யாம் தும்மலபள்ளி இயக்கும் இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரிஜிடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரவீன் ரெட்டி ஜங்கா மற்றும் சுப்பா ரெட்டி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் தர்ம மகேஷ் நாயகனாக நடிக்கிறார்.
இதுகுறித்து பிரிஜிடா கூறியிருப்பதாவது : எனது அடுத்த முன்னேற்றம் குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல்மிக்க, அழகான குழுவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் ஊக்கமும் தேவை என்று கூறியிருக்கிறார்.