'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுசல் இருவரும் நேற்று ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். தன்னை விட ஐந்து வயது சிறியவரான விக்கியைக் காதலித்து கரம் பிடித்துள்ளார் கத்ரினா.
அதிக கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் மணமக்களே நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். கத்ரினா கைப், விக்கி கவுசல் இருவரும் ஒரே நேரத்தில் அவர்களது சமூகவலை தளத்தில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு, “இந்தத் தருணத்திற்கு எங்களை கொண்டு வந்ததற்கு அன்பும், நன்றியும் மட்டுமே காரணம். இந்தப் புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக துவங்க உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கத்ரினாவின் இந்தப் பதிவிற்கு 10 மணி நேரத்தில் 75 லட்சம் பேரும், விக்கியின் பதிவிற்கு 52 லட்சம் பேரும் லைக்ஸ் கொடுத்துள்ளார்கள். மணமக்களை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.