ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

முருங்கைக்காய் என்றாலே கே.பாக்யராஜ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காயை வைத்து அடல்ட் காமெடி செய்திருந்தார். இந்தநிலையில் தற்போது அவரது மகனான சாந்தனு நடித்துள்ள புதிய படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10-ந்தேதி வெளியாக உள்ள அப்படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். அதோடு, முந்தானை முடிச்சு படத்தில் இணைந்து நடித்த கே.பாக்யராஜ், ஊர்வசி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் காமெடி செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த படத்தைப்பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.