கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம்சரண் ஜோடியாக நடிக்கிறார். 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடப் போவதாகச் சொல்லப்படும் இப்படத்தில் ஆலியா பட் மொத்தமாகவே 15 நிமிடங்கள்தான் இடம் பெறுகிறாராம். அவருடைய கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றக் கதாபாத்திரம் போலத்தான் இருக்கும் என்கிறார்கள்.
நேற்று இப்படத்தின் பாடல் ஒன்று தமிழில் 'உயிரே...' வாகவும், மற்ற மொழிகளில் 'ஜனனி'...யாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இப் பாடலில் படத்தின் முக்கிய நடிகர்கள், நடிகைகள் இடம் பெற்றுள்ளார்கள். அஜய் தேவகன் ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா சரண் கூட சில வினாடிகள் வருகிறார். ஆனால், ஆலியா பட் ஒரு சில வினாடிகளே வருகிறார்.
ஹிந்தியில் வெளியிடும் போது அந்த மொழி நாயகி நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ஆலியா தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக ஆலியா மொத்தமாகவே 10 நாட்கள்தான் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.