சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
புதியவர்கள் இணைந்து புதிய முயற்சியில் படம் எடுப்பது எப்போதாவது அரிதாக நடக்கும். அந்த வகையில் உருவாகி உள்ள படம் மட்டி. இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கே ஜி.எப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.பி.பாலா தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகி உள்ளது. யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல் கூறியதாவது: 6 மொழிகளில் தயாரானாலும் ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன் திகில் என்று பல வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும். கே ஜி.எப் போன்று இப்படம் ஒரு முழு மேக்கிங் ஸ்டைல் விசையுடனான விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும்.
சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் வரும் ஜீப் பந்தயப் படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறோம். இதில் வரும் ஜீப் ரேஸ் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன.
இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்பு அனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன. இதில் வரும் சாகச காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும்.
இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் தருவதற்கு மறுத்து விட்டார் .ஏன் என்றால் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஓடிடியில் வெளியிடக் கொடுக்க மறுத்துவிட்டார். என்றார்.